ஜார்கண்ட் தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவம் – நடந்தது என்ன? 

ஜார்கண்ட் தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவம் – நடந்தது என்ன? 

By Vaishnavi, Chennai

சென்னை பெரு வெள்ளத்தின் போது, கானத்தூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஜார்கண்ட் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியாக விடிந்தது. மேலும் ஹசிம் என்ற தொழிலாளி கவலைக்கிடமான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு நடந்த அலைக்கழிப்புகள்; மொழி புரியாமல், குடும்பமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது இருந்த தவிப்பு , புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்படாத அரசு கட்டமைப்பைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

தொழிலாளர்களாக ஒருங்கிணைக்கப்படாததும் இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும்.
அரசு இயந்திரங்கள் இவர்களுக்கான தீர்வை காணாத போது, தொழிலாளர்களுக்குக் கைகொடுத்த தவுஹீத் ஜமாத் இஸ்லாமிய தோழர்கள் ஆம்புலன்ஸ் சேவையை உறுதி செய்து, இரண்டு தொழிலாளர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

injurd worker hasim

நடந்தது என்ன?

கானத்துர் பகுதியில் ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த சுமார் 70 தொழிலாளர்கள் தனித்தனி வாடகை வீடுகளில் தங்கி, கட்டிடத் தொழில் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்து வந்துள்ளனர். மழை காலம் என்பதாலும், வேலை கிடைக்காத சூழல் என்பதாலும் சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியும் வந்துள்ளனர்.

4 டிசம்பர் அதிகாலை 4 மணி அளவில், கன மழை காரணமாகக் கட்டுமானத்தில் இருந்த 3 அடுக்கு கட்டிடத்தில் இருந்த சுவர் , இவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டுக் கூரையில் விழுந்துள்ளது. இதனால் மொத்த கூரையும், தூங்கிக் கொண்டிருந்த மூவர் மீது சரிந்துள்ளது. இந்த இடற்பாட்டில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் ஷேக் அப்ரோஜ்(37) , முஹம்மத் டாபிக் (23) துரதிஷ்ட வசமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

பலத்த காயங்களுடன் மற்றொரு தொழிலாளி ஹசிம் (சுமார் 34) தவண்டு வந்து, கத்தியும் , அழுதும் உதவியை அழைத்துள்ளார். மற்ற வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து வந்து உடல்களை வெளியே எடுத்து, ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

https://www.workersunity.com/wp-content/uploads/2023/12/workers-admitted-to-chennai-hospital.jpg

திக்குத்திசை புரியாமல் தவித்த தொழிலாளர்கள்

இறந்து பிணமாக இருக்கும் நண்பர்கள் ஒரு புறம், மோசமான உடல்நிலையில் இன்னொரு நண்பன் மறு புறம் என, உடன் இருந்த சக தொழிலாளர்கள் இரண்டு நாளாக பிணவரைக்கும் வார்டிற்கும் அழைத்து வந்தனர்.

இந்த நிலையிலும் பிணவறையில் இருக்கும் சடலத்தைப் பார்க் கூட 300-400 என கையூட்டும் கொடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பெரும் அதிர்ச்சியைச் சந்தித்த நிலையில், மொழியறியாத சூழலில் உடன் பணி புரிந்த தொழிலாளர்கள் செய்வதறியாது காவல் நிலையத்திலும், மருத்துவமனையிலும் தவித்து வந்துள்ளனர்.

https://www.workersunity.com/wp-content/uploads/2023/12/Chennai-cyclone-migrant-worker-death-ambulence.jpg

தொழிலாளர்களுக்கு தோள் கொடுத்த இஸ்லாமியச் சகோதரர்கள்

தொழிலாளர்களின் குடும்பத்தினர் மூலம் இச்செய்தியை அறிந்த ஜமாத் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி உதவ முன்வந்துள்ளது. “ஜமாத்தில் இருந்து அழைப்பு வந்தது எங்களுக்கு. குடும்பத்தினர் எங்களை நாடினர்.

அதனால் உடனடியாக இதில் உள்ள பிரச்சினையைக் களம் கண்டு சரி செய்தோம். கானத்தூர் இன்ஸ்பெக்டர் அவர்களை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி உடல்களை ஊருக்கு அனுப்புவதற்கான பணிகளைச் செய்தோம். பின் பிரேதப்பரிசோதனைக்கான வேலைகள் முடிக்கவிடப்பட்டு, உடல்களை நல்ல முறையில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என TNDJ யை சார்ந்த ஷாபுதின் அவர்கள் குறிப்பிட்டார்.

“ஜாதி வேறுபாடு, மாநில வேறுபாடு இன்றி மனிதம் ஒன்று என்று சொல்வதே எங்கள் இஸ்லாமிய கொள்கை. மற்றவர்களுக்கு உதவி செய்யவே இஸ்லாம் கற்றுக்கொடுத்துள்ளது” என்று கூறுகிறார் முஜீப் ரஹ்மான் (TNDJ).

மருத்துவமனையில் ஹசிம்

இடர்பாட்டில் சிக்கிய ஹசிமிற்கு வயிற்றுப் பகுதியில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில், வயிற்றில் ஒரு பகுதி வெட்டப்பட்டு உணவு உண்பதும், கழிவு வெளியேறுவதும் மருத்துவ உதவி மூலமே இயக்கப்படுகிறது. அவர் மனைவியின் கைகள் ஏற்கனவே வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தினால் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பொறுப்பு – யார்?

மழை காலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி ஆஜாக்கிறதையாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது என்று ஐயப்பன் என்ற நபர் மீது தொழிலாளர்கள் தரப்பில் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவை குறித்துப் பேசிய TNDJ சகோதரர்கள் , “இது ஒரு இயற்கை பேரிடர். மனிதாபிமான அடிப்படையில். பாதிப்பு ஏற்படுத்திய கட்டிட உரிமையாளர், இறந்த இரு தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கு 50,000 தொகையும், ஆம்புலன்ஸ் செலவினத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசிடம் இருந்தும் நிவாரணத்தொகை உறுதி செய்யப்படும் ” எனக் குறிப்பிட்டனர் .

கட்டுமான தொழிற்சங்கத்தைச் சார்ந்த தோழர் கீதா இது குறித்துப் பேசிய போது, “ஜமாத் நண்பர்கள் முன்வந்து செய்வதை நல்லது. ஆனால் நலவாரியத்தில் நிச்சயம் இவர்களுக்கான ஆம்புலன்ஸ் சேவைக்கு நாம் அணுகியிருக்க முடியும். நலவாரியத்திற்குத் தொழிலாளர்களுக்காக இருக்கும் நிதியைப் பயன்படுத்துவது அவசியம். நிவாரண தொகையை நாம் இத்தொழிலாளர்களுக்குச் சாத்தியப்படுத்த வேண்டும்” எனக்குறிப்பிட்டர்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நலவாரிய திட்டங்கள், வழிமுறைகள் இருப்பினும், அவர்கள் தொழிலாளர்களாக ஒருங்கிணைக்கப்படாத பட்சத்தில் அதனை சாத்தியப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. மேலும் இத்தொழிலாளர்கள் ISM (Inter state migrant act ) இந்த படி பதிவு செய்யப்பட்டுள்ளார்களா? இதில் தொழிலாளர் துறையின் பங்கு என்ன ?

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ஆதரவு கட்டமைப்புகள் என்ன ? போன்ற கேள்விகளை முன்வைப்பது மூலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்

https://i0.wp.com/www.workersunity.com/wp-content/uploads/2023/04/Line.jpg?resize=735%2C5&ssl=1

Do read also:-

https://i0.wp.com/www.workersunity.com/wp-content/uploads/2023/04/Line.jpg?resize=735%2C5&ssl=1

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Workers Unity Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.