கடந்த வாரத் தொழிலாளர் செய்திகள்

கடந்த வாரத் தொழிலாளர் செய்திகள்

#இந்தியாவிலும் வாரத்தில் நான்கு வேலை நாட்களா? U.K வில் வெற்றிகரமான முயற்சிக்குப் பின்னர் வல்லுநர்கள் நம்பிக்கை

ஊதிய மாற்றமின்றி ‘ குறைந்த வேலை’ என்பது உற்பத்தித் திறன் மற்றும் வேலை – வாழ்க்கை சம நிலையை அதிகரிக்கும் என U.K சார்ந்த ஒரு முயற்சி உறுதி செய்துள்ளது. இச்சூழலில் நான்கு வேலை நாட்கள் யோசனை இந்தியாவிலும் மேலோங்கி வருகிறது. கர்நாடகா சட்ட மன்றத்தில் 12 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் 3 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுவார் எனக் கூறியுள்ளது.

Source : mint

#பெருகும் உட்கட்டமைப்புகள் அதிக வேலையை உருவாக்கலாம் என்று இந்தியா கூறினாலும் பொருளாதார நிபுணர்கள் அதில் உறுதிக்கொள்ளவில்லை.

நரேந்திர மோடி ஆட்சியன் பெரும் விமர்சனமாக இருப்பது இந்தியாவின் வேலையின்மை விகிதம். இச்சூழலில் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு உயரும் என்பதில் நம்பிக்கை கொள்ளவில்லை பொருளாதார நிபுணர்கள். JNU ஓய்வு பெற்ற ஆசிரியர் அருண் குமார், அரசின் கவனம் “ஒட்டுமொத்தமாகத் தவறு”. அதன் கொள்கைகள் “வேலை அதிகரிப்புக்கு எதிரானது” என்று கூறுகிறார்.

Source: CNBC

# புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் போலி காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் வேளையில் , தேவையற்ற வன்முறை அரசியலை ஊக்குவித்துள்ளது. தமிழ்நாடு DGP வைரலான காணொளிகள் போலி எனக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திருப்பூர் பாதுகாப்பானது. வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்ட பீகார் பத்திரிக்கைச் செய்தி தவறு என்றும் தொழிலாளர்கள் எல்லா வித புகார்களையும் மாவட்ட ஆட்சியரிடமும் காவல் துறையிடம் தெரிவிக்கலாம் என இரு உதவி எண்களைக் குறிப்பிட்டுள்ளது. – 94981 01320 / 0421 – 2970017

Source: the Hindu

#பெங்களூர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்களுக்கு மோசமான தீக்காயங்கள். பாய்லர் வெடிக்கும்பொழுது 3 தொழிலாளர்கள் அருகில் வேலை செய்து கொண்டிருந்ததாகத் தகவல்..

Source: TOI

# கூகுள் மைக்ரோசாப்ட் சேல்ஸ் போர்ஸ் மற்றும் பலர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இப்பெருநிறுவனங்களில் அறிவிக்கப்பட்ட 567 ஆட்குறைப்பு உலகளவில் 1,50,000 IT தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: India today

# ஆப் சார்ந்த வருகை பதிவேட்டை உடனே நிரிதக்கோரும் 100 நாள் தொழிலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள். மோடி அரசாங்கம் கொண்டு வந்த புதிய வருகை பதிவேட்டு முறை சர்வைலன்ஸ் முறை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். வருகை பதிவேட்டில் பதிவு செய்யாதவர்கள் ஊதியத்தை இழக்கும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்தின் இத்திட்டம் செலவினத்தைக் குறைக்கும் நகர்வோ என்ற சந்தேகம் எழுப்பப் படுகிறது.

Source: National herald

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Workers Unity Team

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.